Swiss News In Tamil

குடியிருப்பில் ‘கெல்லர்’ கதவுகளை உடைத்த திருடர்கள் கைது

குடியிருப்பில் 'கெல்லர்' கதவுகளை உடைத்த திருடர்கள் கைது

குடியிருப்பில் ‘கெல்லர்’ கதவுகளை உடைத்த திருடர்கள் கைது புதன்கிழமை, அதிகாலை 2:15 மணிக்குப் பிறகு, லூசர்ன் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பலரது கெல்லர் கதவுகள் உடைக்கப்பட்டதாக லூசெர்ன் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது .

இதன் பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரோந்துப் படையினர் அருகில் சந்தேகத்திற்கு இடமான இரு நபர்களை அடையாளம் காண முடிந்தது. உடனடியாக அவர்களை தடுக்க முற்பட்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

திருடர்கள் கைது

இறுதியில் அவசர சேவை போலீசாரால் இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மேலும் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த குற்றப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் 16 வயதுடைய இரண்டு அல்ஜீரியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button