Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மாமிசம் விலை திடீர் குறைப்பு: வியப்பில் மக்கள்

சுவிட்சர்லாந்தில் மாமிசம் விலை திடீர் குறைப்பு: வியப்பில் மக்கள்

சுவிட்சர்லாந்தில் மாமிசம் விலை திடீர் குறைப்பு: வியப்பில் மக்கள்  உலகிலேயே சுவிட்சர்லாந்தில்தான் மாமிசம் விலை அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆனால், திடீரென பிரபல பல்பொருள் அங்காடிகள் மாமிச விலையைக் குறைத்துள்ளதால் மக்கள் வியப்படைந்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில், திடீரென Aldi பல்பொருள் அங்காடி மாமிச விலையக் குறைக்க, உடனே Denner, Lidl மற்றும் Migros ஆகிய பல்பொருள் அங்காடிகளும் மாமிச விலையைக் குறைத்தன.

சுவிட்சர்லாந்தில்

வேறு வழியில்லாமல், Coop பல்பொருள் அங்காடியும் மாமிச விலையைக் குறைக்கவேண்டியதாயிற்று.

கோழிக்கறி விலை 6 சதவிகிதமும், மற்ற இறைச்சிகள் 25 சதவிகிதம் வரையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

எதனால் இந்த திடீர் விலை குறைப்பு என்பது விநியோகஸ்தர்களுக்கே புரியவில்லை. என்றாலும், மக்களுக்கு மகிழ்ச்சிதான்!

Related Articles

Back to top button