Swiss News In Tamil

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரு இளைஞர்கள் கைது

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரு இளைஞர்கள் கைது

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரு இளைஞர்கள் கைது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செயின்ட் கேலனில் பொது இடத்தில் ஸ்ப்ரே பெயிண்டிங் செய்ததற்காக 17 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

St.Gallen நகரின் கன்டோனல் காவல்துறையினரால்  தேடுதல் மேற்கொள்ளப்பட்ட வேளை மற்றொரு நபர் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி,  நள்ளிரவு 12.30 மணியளவில் போலீசாருக்கு அறிக்கை கிடைத்துள்ளது. உடனடியாக போலீசார் சம்பவம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு குற்றவாளிகளை காணமுடியவில்லை.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற்கு இடமான மூவரை போலீசார் அவதானித்துள்ளனர். எனினும் அதில் 17 வயதுடைய இருவரை கைது செய்யமுடிந்தது. ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சொத்து சேதத்தை இன்னும் கணக்கிட முடியாது. சுவிஸ் இளைஞர்கள் St.Gallen மாகாணத்தின் சிறார் வழக்குரைஞர் அலுவலகத்தில் புகார் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SDA

Related Articles

Back to top button