Swiss News In Tamil

13 வயது சிறுமியை உடலுறவுக்கு அழைத்த சுவிஸ் நபர்கள் கைது

13 வயது சிறுமியை உடலுறவுக்கு அழைத்த சுவிஸ் நபர்கள் கைது சூரிச் கன்டோனல் போலீசார் இரண்டு பாலியல் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

சூரிச் மாகாண போலீசார் அரட்டை தளங்களில் மீது நடத்திய விசாரணையின் பின்னர் இரண்டு சுவிஸ் பிரஜைகளை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறுவர் பாலியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மே 8 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சூரிச் மாகாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது அரட்டை மேடையில் தெரியாத ஒரு நபர் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு உரையாடலைத் தொடங்கினார்.

42b3b6f5 09ac 4cbd b50e c57117bc0c7f jpeg 994×559

சிறுமி தனக்கு 13 வயது என்று கூறினார். அதனைத்தொடர்ந்து குறித்த நபர் சிறுமியுடன் ஆபாசமாக பேசி நேரில் வர அழைத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் சார்பில் போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும் குறித்த நபரை கைது செய்வதற்காக அவரின் ஆசைப்படி நேரில் சந்திக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டது. சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் செவ்வாய் கிழமை மதியம் குறிப்பிட்ட இடத்தில் 49 வயது நபர் ஒருவர் வந்தார்.

அங்கு அவர் சிவில் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். இதே வேளை சூரிச் ஓபர்லாந்தில் 34 வயதான ஒருவரும் 13 வயது சிறுமியுடன் ஆபாசமாக பேசி தவறான நடத்தையில் ஈடுபட முயன்ற குற்றத்திற்காக கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். (bluewin)

Related Articles

Back to top button