Swiss News In Tamil

தொலைபேசி மூலம் பெண்ணுக்கு தொல்லை : ஆர்காவ் இளைஞனுக்கு அபராதம்

தொலைபேசி மூலம் பெண்ணுக்கு தொல்லை : ஆர்காவ் இளைஞனுக்கு அபராதம் ஆர்காவ் கன்டோனின் சோப்பிங்கள் பகுதியில் தொலைபேசி மூலம் பெண்ணை தொல்லை செய்த நபர் ஒருவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து, ஆர்கோவைச் சேர்ந்த ஒருவர் தொலைபேசி மூலமாக பெண் ஒருவருக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

TELEMMGLPICT000357296563 17003991673600 trans NvBQzQNjv4BqqVzuuqpFlyLIwiB6NTmJwfSVWeZ vEN7c6bHu2jJnT8

அடையாளம் தெரியாத தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பெண்ணுக்கு அழைக்கும் குறித்த நபர் எதுவும் பேசமால் இருப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் அவரின் மூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். நவம்பர் மற்றும் டிசம்பர் 2023 க்கு இடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆர்காவைச்சேர்ந்த பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

22 வயது இளைஞன் ஒருவரே குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டுவந்துள்ளார். அந்த இளைஞன் 64 முறைக்கு மேல் அழைப்பு விடுத்ததாகவும் சில சமயங்களில் ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட தடவை அழைப்பதாகவும் பெண் போலீசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

தொடர்ச்சியாக இவ்வாறான அழைப்பு வருவது தனக்கு பயமாக இருப்பதாகவும் தொந்தரவாக இருந்ததாகவும் பெண் மேலும் தெரிவித்தார். குறித்த நபரை போலீசார் அடையாளம் கண்டு அவர் மீது தற்போது நிபந்தனையுடன் கூடிய அபராதாமாக 3850 சுவி பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி மூலமாக பெண்ணுக்கு தொந்தரவு செய்தமை, தவறான முறையில் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button