Swiss News In Tamil

சூரிச் விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்

சூரிச் கன்டோனல் போலீசார் செவ்வாய்க்கிழமை மாலை (ஜனவரி 9, 2023) சூரிச் விமான நிலையத்தில் போதைப்பொருள் கொண்டு சென்ற ஒருவரை கைது செய்தனர்.

அவரிடம் சுமார் 14 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.. பாங்காக்கில் இருந்து சூரிச்சிற்கு விமானம் மூலம் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணித்த 18 வயது ஸ்பானியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்காவ் கன்டோனில் திருட்டு : இரு அல்ஜீரியர்கள் கைது.!!

போலீசார் அவரது லக்கேஜை சோதனை செய்தபோதுஇ ​​சூட்கேசில் கஞ்சா நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

சூரிச்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த எடை சுமார் 14 கிலோகிராம் என கண்டறியப்பட்டுள்ளது.

துல்லியமான சோதனைகளுக்காக குறித்த போதைப்பொருள், மருந்துகள் தடயவியல் நிறுவனத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சூரிச்சில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கை : சிக்கிய 125 சாரதிகள்

குறித்த நபர் கைது செய்யப்பட்டு அரசு வழங்கறிஞர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்
பட ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்

Related Articles

Back to top button