Swiss News In Tamil

வாழ்க்கையில் திருப்தியடையும் தன்னார்வை சேவையாளர்கள் : ஆய்வில் தகவல்

வாழ்க்கையில் திருப்தியடையும் தன்னார்வை சேவையாளர்கள் : ஆய்வில் தகவல்

சமூக நலத்திற்காக நேரத்தை ஒதுக்குகிறவர்கள், தங்களின் சொந்த வாழ்க்கையிலும் அதிக மகிழ்ச்சியை அடைகிறார்கள் என்பதை, ஸ்விஸ் மக்களும் பங்கேற்ற Marketagent நிறுவனத்தின் சமீபத்திய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

அந்த ஆய்வின்படி, தன்னார்வச் சேவையில் ஈடுபடுகிறவர்களில் 78% பேர் வாழ்க்கையில் திருப்தியாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இது, சராசரியாக 65% பேர் மட்டுமே வாழ்க்கையில் திருப்தி அடைகிறார்கள் என்ற தரவுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வித்தியாசம்.

மேலும், தன்னார்வச் சேவை செய்பவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அதிக அர்த்தம் இருப்பதாக உணர்கிறார்கள். அதோடு, அவர்கள் புதிய நண்பர்களை உருவாக்கி, புதுத் திறன்களை கற்றுக்கொண்டு, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கும் மனப்பாங்கும் அதிகரிக்கிறது.

உடல்நலத்திலும் தாக்கம் காணப்படுகிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உடல் இயக்கம் நிறைந்த வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

“பிறருக்காக செய்யும் நன்மை, நமக்கே நன்மை தருகிறது” என்ற உண்மையை மொத்தத்தில், இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது:. சமுதாய சேவையால் சமூகமே வளருவதல்லாது, அதில் ஈடுபடுகிறவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சி, நம்பிக்கை, உடல்-மனம் ஆரோக்கியம் ஆகியவை உயர்கின்றன என்பதே இந்த ஆய்வு சொல்லும் முக்கிய செய்தியாக கருதப்படுகிறது.

@WRS

Related Articles

Back to top button