Swiss News In Tamil

சுவிஸ் மருத்துவமனைகளுக்கு வன்முறையால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

The number of victims of violence in Swiss hospitals is on the rise

சுவிஸ் மருத்துவமனைகளுக்கு வன்முறையால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் சுவிஸ் மருத்துவமனைகளில் உடல் ரீதியான வன்முறைகளின் பதிவுகள் இரட்டிப்பாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு, சுவிஸ் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், கன்டோனல் போலீசார் 70 முறை நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது என மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீடு மூலம் தெரியவந்துள்ளது.

சுவிஸ்

இதுதொடர்பாக கன்டோனல் போலீசார் 490 வன்முறை குற்றங்களை பதிவு செய்துள்ளனர். அறிக்கையின்படி, இதில் கடுமையான அச்சுறுத்தல்கள், உடல் ரீதியான வன்முறைகள், உயிருக்கு ஆபத்தான உடல் காயங்கள் என்பவை அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான வன்முறைச்சம்பவங்கள் தொடர்பாக மருத்துவமனைக்கு வருபவர்களால் சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் மட்டும், பாதுகாப்பு சேவை ஒரு நாளைக்கு பல முறை தலையிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

‘கிட்டத்தட்ட அனைத்து’ சுவிஸ் மருத்துவமனைகளிலும் இவ்வாறான வன்முறை வம்பவங்களின் பதிவுகள் அதிகரித்து வருகிறது. சூரிச் மற்றும் பெர்னைத் தவிர, பாசல் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் லூசெர்னின் கன்டோனல் மருத்துவமனை ஆகியவையும் வன்முறை அதிகரிப்பதாகப் புகாரளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button