Swiss News In Tamil

படகு கவிழ்ந்து காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

படகு கவிழ்ந்து காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

படகு கவிழ்ந்து காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார். கன்டோன் ஒப்வால்டன் சர்னென் ஏரியில் படகு விபத்துக்குள்ளானதில் காணாமல் போன 75 வயது முதியவர் பல நாள் தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

ஓப்வால்டன் கன்டோனல் போலீசார் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலின் படி குறித்த நபர் கடந்த 2ம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவித்தனர்.

படகு கவிழ்ந்து

அந்த நபர் திங்கள்கிழமை படகில் சென்றபோது, ​​படகு கவிழ்ந்தது. கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பின்னர் அவர் நீந்துவதை பலர் பார்த்ததாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேடுதலில் லூசர்ன் காவல்துறை, பெர்ன் மற்றும் சூரிச்சில் இருந்து  மோப்ப நாய்கள் மற்றும் சர்னென் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த டைவர்ஸ் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

©Keystone/SDA

Related Articles

Back to top button