Swiss News In Tamil

ஜெர்மன்- சுவிஸ் எல்லையில் 4 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்ட திருடன்

ஜெர்மன்-சுவிஸ் எல்லையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட திருடன்

ஜெர்மன்-சுவிஸ் எல்லையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட திருடன் திங்கட்கிழமை மதியம் பாசல் மற்றும் Weil am Rhein (வெயில் ஆம் ரைன்( இடையேயான எல்லையில் நீண்டகாலமாக தேடப்பட்ட திருடனை ஜெர்மன் ஃபெடரல் போலீசார் பிடித்தனர்.

நான்கு ஆண்டுகளாக தப்பி ஓடிய 39 வயது நபர்இ எல்லை தாண்டிய டிராமில் இருந்து அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குறித்த அல்ஜீரியர் 2019 இல் ‘திருட்டு’ குற்றத்திற்காக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் தண்டனையை அனுபவிக்கவில்லை.

ஜெர்மன்

அப்போது தப்பியோடியிருந்த குறித்த குற்றவாளி பாசலில் இருந்து ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட போதுஇ ​​அவரது கைரேகைகளை வைத்து பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பல வருடங்கள் கடந்தாலும் காவல்துறையை ஏமாற்ற முடியாது என்பதையே இந்த வழக்கு காட்டுவதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Back to top button