சூரிச்சில், போலியான தொலைபேசி அழைப்பு மூலம் 88 வயதான முதியவரை குறிவைத்து மோசடி செய்பவர்களுக்கு உதவிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதியவரின் மனைவி விபத்தில் சிக்கியதாக மோசடி செய்தவர்கள் பொய்யாகக் கூறி பெரும் தொகையை ஜாமீனாகக் கோரியுள்ளனர். முதியவர் பல்லாயிரக்கணக்கான பிராங்குகளை எடுக்க ட்ரைவருடன் வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாலை 6 மணிக்கு முன்பு, 88 வயது முதியவர் பல்லாயிரக்கணக்கான பிராங்குகளை எடுக்க முயன்றதால்இ ஒரு வங்கி ஊழியர் அவர்கன் மீது சந்தேகமடைந்து போலீஸை அழைத்தார். போலீசார் விரைந்து வந்து அவர்கள் பயணித்த காரை சோதனை செய்தனர். அதில் ஏராளமான நகைகள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் 49 வயதான துருக்கிய நபரான ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சூரிச் போலீசார் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். காவல்துறை எப்போதும் பொதுமக்களிடம் பணம் கோருவதில்லை எனவும் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான தொiபேசி அழைப்புகளை எதிர்கொண்டால் உடனடியாக போலீசாரின் அவசர எண்ணை தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளனர். அண்மைக்காலமாக சுவிட்சர்லாந்தில் பல்வேறு விதமான மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.