Swiss News In Tamil

டெல் அவிவ் மற்றும் பெய்ரூட் விமானசேவையை ரத்துசெய்த சுவிஸ்

டெல் அவிவ் மற்றும் பெய்ரூட் விமானசேவையை ரத்துசெய்த சுவிஸ்

டெல் அவிவ் மற்றும் பெய்ரூட் விமானசேவையை ரத்துசெய்த சுவிஸ்  சுவிட்சர்லாந்து அதன் டெல் அவிவ் விமானங்கள் மற்றும் பெய்ரூட் விமானங்களின் இடைநிறுத்தத்தை மேலும் நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இருந்து இரு நகரங்களுக்குமான சேவை ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்படும்.

டெல் அவிவ்

இதற்கு முன்னர் ஆகஸ்ட் 12 ஆம் ம் திகதி வரையே இடைநிறுத்தப்படுவதாக அறிவித்திருந்ததை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு நாள் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டிய விமான டிக்கெட்டுகளை பதிவு செய்து பாதிக்கப்பட்ட பயணிகள் சுவிஸ் விமானசேவை நிறுவனத்தினால்  தொடர்பு கொள்ளப்படுவார்கள். மேலும் அவர்களின் பயணத்தை ஒரு பிற்பகுதிக்கு இலவசமாக ஒத்திவைக்க அல்லது முழு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button