Swiss News In Tamil

Lausanne சிறைச்சாலையில் கைதி தற்கொலை.!!

Lausanne சிறைச்சாலையில் கைதி தற்கொலை.!!

Lausanne சிறைச்சாலையில் கைதி தற்கொலை.!! கன்டோன் வாட் இல் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் கடந்த வியாழன் அன்று காலை வாட் கன்டோனின் லௌசானின் போயிஸ்-மெர்மெட் சிறைச்சாலையில் கைதி ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற சிறை ஊழியர்கள் முயற்சிசெய்தும் பலனழிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலையில்
(c) கீஸ்டோன்

வாட் கன்டோனல் போலீசார் இதுபற்றி தெரிவிக்கையில் அதிகாலை 5:40 மணியளவில்இ ஒரு கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறை ஊழியர்களுக்கு சக கைதி எச்சரித்ததாகவும் அவர்கள் சென்று பார்த்தபோது குறித்த கைதி இறந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மரணமடைந்தவர் கொசோவா நாட்டைச்சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. எனினும் இச்சம்பவம் தொடர்பான உண்மை நிலைலை விசாரரிக்க நீதிமன்னறம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button