சர்ச்சைக்குரிய ‘தற்கொலை காப்ஸ்யூல்’ வெளியீடு ரத்து
சர்ச்சைக்குரிய 'தற்கொலை காப்ஸ்யூல்' வெளியீடு ரத்து
சர்ச்சைக்குரிய ‘தற்கொலை காப்ஸ்யூல்’ எனப்படும் தற்கொலை இயற்திர வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகின் முதல் ‘டெத் பாட்’ ஆனது ஜூலை 17 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் அதன் தொடக்க பயன்பாட்டிற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் அதன் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நைட்ரஜன் மூலம் மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டு குறித்த இயந்திரத்தில் மரணம் தீர்மானிக்கப்படுகிறது.


தற்போது அதன் மூலம் ஏற்படுத்தப்பவிருந்த முதல் தன்னார்வ மரணம், திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என காப்ஸ்யூலின் வடிவமைப்பாளர் தி லாஸ்ட் ரிசார்ட், குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் சட்டத்தின் கீழ், பகுத்தறிவு மற்றும் சிறந்த மன திறன் கொண்டவர்கள் மட்டுமே உதவி மரண சேவைகளை நாட அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த தற்கொலை இயந்திரங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா என்பது தொடர்பாக எதுவித தகவலும் வெளியாகவில்லை.





