Swiss News In Tamil

சுவிஸ் சர்வதேச விமான சேவை வருமானம் அதிகரிப்பு

சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வேலை நிறுத்தம், சீரற்ற காலநிலை உள்ளிட்ட காரணிகளை தாண்டி 99 வீதமான விமானப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் சுவிஸ் விமான சேவை நிறுவனம் 277.6 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை செயற்பாட்டு வருமானமாக ஈட்டியுள்ளது.

சுவிஸ் விமான சேவை, வருமானம் அதிகரிப்பு

இது கடந்த ஆண்டில் இந்தத் தொகை 220.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக காணப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் விற்பனை 11 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னர் காணப்பட்ட அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button