Swiss News In Tamil

நாய்களின் ஆக்ரோசமான சண்டை : ஒரு நாய் உயிரிழப்பு.!!

விடாப்பிடியான நாய்ச்சண்டை : கொடரியால் தாக்கிய நபர்

நாய்களின் ஆக்ரோசமான சண்டை : ஒரு நாய் உயிரிழப்பு.!! திங்கட்கிழமை மாலை சென்ட்காலன் நகரில் உள்ள லாச்சென் மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு நாய்கள் சண்டையிட்டன.

பின்னர் ஒரு குடியிருப்பாளர் கோடாரியை எடுத்து நாய்களில் ஒன்றைத் தாக்கினார். அதில் ஒரு நாய் பலியாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், திங்கட்கிழமை மாலை சென்ட்காலன் கன்டோன் லாச்சென் மாவட்டத்தில் உள்ள சொனாவ்திராசவில் இரண்டு நாய்கள் ஆக்ரோசமாக மோதின.

நாய்களின்
(c) TVO

அதில் ஒரு நாய் மற்றைய நாயின் கழுத்தை பலமாக கடித்துள்ளது. ‘இரண்டு நாய் உரிமையாளர்களும் அவற்றை பிரிக்க கடுமையாக முயன்றனர். ஆனால் அவை தோல்வியில் முடிவடைந்தன என்று சென்ட்காலன் நகர காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் டியோனிஸ் வீட்மர் கூறுகிறார்.

வழிப்போக்கர்களும் குறிப்பிட்ட நாய்களை பிரிப்பதில் தோல்வியடைந்தனர். இவற்றையெல்லாம் பால்கனியில் இருந்து அவதானித்துக்கொண்டிருந்த உள்ளூர்வாசி ஒருவர் கோடரி மற்றும் சமையலறை கத்தியுடன், நாய்கள் சண்டையிடும் பகுதியை நெருங்கியுள்ளார். 43 வயதான ஜெர்மானியரான அவர் ஒரு நாயின் முதுகில் அடித்ததும் நாய்ச்சண்டை முடிவுக்கு வந்துள்ளது.

இதில் பலத்த காயம் அடைந்த நாய் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சைக்காக கொண்டுசெல்லும் போது மரணமடைந்துள்ளது. இச்சம்பவம் பற்றிய சரியான பின்னணி இன்னும் தெளிவாக தெரிவில்லை.

‘நாய்களுக்கு இடையே எப்போதும் சிறிய மோதல்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இதுபோன்ற ஒரு வழக்கு இதற்கு முன்பு நடந்ததாக எனக்குத் தெரியவில்லைஇ’ என்கிறார் காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் விட்மர்.

Related Articles

Back to top button