Swiss News In Tamil

உக்ரைன் அமைதி மாநாட்டில் இருந்து இடைநடுவில் வெளியேறிய தலைவர்கள்

உக்ரைன் அமைதி மாநாட்டில் இருந்து இடைநடுவில் வெளியேறிய தலைவர்கள்

நிட்வால்டனில் உள்ள பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் உக்ரைன் அமைதி மாநாட்டில் பங்கேற்க வந்த பல நாடுகளின் தலைவர்கள், இறுதி வரை அதில் பங்கேற்காமல் முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்இ ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டவர்கள் நேற்றுக்காலை மாநாடு தொடங்கி சில மணி நேரங்களுக்குப் பின்னர் வெளியேறினர்.

உக்ரைன் அமைதி மாநாட்டில்

ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நேற்றுக் காலை மீண்டும் பெர்லினுக்கு திரும்பிச் சென்று விட்டார். இருப்பினும் அவரது பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button