Swiss News In Tamil

சுவிஸ் நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அதிகரிப்பு

சுவிஸ் நாட்டில் பலர் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்துத் தடுப்புப் பணியகத்தின் புதிய அறிக்கையின் படி , சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு நாளும் 1,000 வாகன ஓட்டிகளில் நான்கு பேர், சட்டப்பூர்வ வரம்பான 0.05 சதவீதத்திற்கு மேல் இரத்தத்தில் மதுவின் அளவைக் கொண்டு வாகனம் ஓட்டிச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ்

அவர்களில் பெரும்பாலானோர் 31 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எனவும், நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதி, ஜெர்மன் மொழி பேசும் பிராந்தியத்தை விட குடிபோதையில் அதிக வாகன ஓட்டிகளைப் பதிவு செய்துள்ளதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், மது அருந்தியதன் மூலம் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதோடு 506 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆனால் ஆய்வில் சாதகமான செய்தி ஒன்றும் கிடைத்துள்ளது. அதாவது ’30 வயதிற்குட்பட்டவர்கள் குடிபோதையில் அரிதாகவே வாகனம் ஓட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button