Swiss News In Tamil

சுவிஸ் விமான நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய சேவைகள்

சுவிஸ் விமான நிறுவனம் புதிய நீண்ட தூர இடங்களுக்கான விமானசேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.

மே, 7 ஆம் தேதி, சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனம் சூரிச் மற்றும் தென் கொரிய தலைநகர் சியோல் இடையே, தனது முதல் நேரடி விமானசேவையைத் தொடங்கவுள்ளது.

சுவிஸ் விமான நிறுவனம்

வாரத்திற்கு மூன்று முறை குறிப்பிட்ட சேவை வழங்கப்படுகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிச்சிலிருந்து மதியம் 1:40 அளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 8:25 அளவில் சியோலில் தரையிறங்குகிறது.

மேலும் சியோலில் இருந்து திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9:55 அளவில் புறப்படும் விமானம் மாலை 4:50 அளவில் சூரிச் வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button