Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் – இத்தாலி ரயில் சேவைகள் நிறுத்தம்

கோடை விடுமுறை காரணமாக சுவிட்சர்லாந்தில் இருந்து இத்தாலி செல்லும் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஜூன் 9 முதல்இ குறைந்தது மூன்று மாதங்களுக்குஇ ரயில்வே பணிகள் காரணமாக இத்தாலிய நகரங்களான டோமோடோசோலா மற்றும் மிலான் இடையே ரயில் சேவை தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான பயணமும் தடைபடும்.

சுவிட்சர்லாந்தில்

எனினும் இரண்டு நகரங்களுக்கு இடையே ஒரு பேருந்து சேவை ஈடுபடுத்தப்படும் எனவும் சிறந்த போக்குவரத்து நிலைமைகளில் பயணத்திற்கு குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்இ இத்திட்டம் சுவிஸ் தேசிய ரயில்வே நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

‘வேலையின் அளவைக் கருத்தில் கொண்டுஇ ஜெனீவா மற்றும் லவுசானிலிருந்து கிராண்ட் செயிண்ட்-பெர்னார்ட் சுரங்கப்பாதை வழியாக மிலானுக்கு நேரடி பேருந்துகளை அமைப்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்’ என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button