Swiss News In Tamil

சூரிச்சில் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீர்க்க நடவடிக்கை

சூரிச்சில் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தீர்வு திட்டத்தை வழங்க ஓராண்டு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

கன்டோனல் பாராளுமன்றம் திங்களன்று ஏற்றுக்கொண்ட பிரேரணையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் பள்ளிகளை நோக்கமாகக் கொண்ட யூத எதிர்ப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான ‘செயல் திட்டத்தை’ உருவாக்க அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சூரிச்சில்

அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் இந்த நடவடிக்கைஇ மார்ச் 2 ஆம் தேதிஇ சூரிச்சில் தீவிரவாதக்குழுவுக்கு ஆதரவான 15 வயது சிறுவன் ஒருவன் ஒரு யூதரை கத்தியால் குத்திய சம்பவத்தினை தொடர்ந்து இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகுஇ யூத எதிர்ப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான சமூக ஒருங்கிணைப்பின் பொதுச் செயலாளர் ஜோஹான் குர்பின்கீல் தெரிவிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் எதிர்காலத்தில் இதுபோன்ற ‘வெறுக்கத்தக்க செயல்களை’ தடுக்க ஒரு மூலோபாயத்தை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சூரிச் ஒரு வருடத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button