Swiss News In Tamil

குழந்தை வைத்திருப்பவர்களுக்கு சுவிஸ் போலீசார் விடுத்த அறிவிப்பு

குழந்தை வைத்திருப்பவர்களுக்கு சுவிஸ் போலீசார் விடுத்த அறிவிப்பு சுவிட்சர்லாந்தின் குழந்தைகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்தவகையில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக சுவிசின் ஆர்காவ் மாகாண போலீசார் ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள் அல்லது குளியல் நிலையங்களில் ரகசியமாக புகைப்படம் எடுக்கப்படுகிறார்கள். குறித்த புகைப்படங்கள் பின்னர் பல தளங்களில் அல்லது டார்க்நெட்டில் விற்கப்படுகின்றன. அல்லது வெளியிடப்படுகின்றன.

குழந்தை வைத்திருப்பவர்களுக்கு

எனவே கோடை காலம் ஆரம்பித்திருக்கின்ற இந்த வேளையில் உங்கள் குழந்தைகளும் வெளியில் விளையாடச்செல்லலாம்இ அல்லது குளியல் மற்றும் நீச்சல் தடாகங்களுக்கு செல்ல நேரிடலாம்.

அவ்வாறான இடங்களில் குழந்தைகள் ஆடை மாற்றுவதையோ அல்லது வேறு நடவடிக்கைகளையோ சந்தேகத்திற்கிடமான முறையில் யாராவது புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் எச்சரிக்கையாக இருக்கவும் என அறிவித்துள்ளனர்.

இது உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல. மாறாக இவ்வாறான குற்றங்கள் நடந்தால் அதில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளவே எனவும் ஆர்காவ் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நடத்தையை குழந்தைகள் அவதானித்தால் அல்லது யார் மீதாவது சந்தேகம் வந்தால் உடனடியாக பெற்றோரிடமோ அல்லது காவல்துறையின் அவசர எண் 117 மூலமாகவோ புகாரளிக்கவும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button