Swiss News In Tamil

சுவிஸ் தேசிய விமான நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

சுவிஸ் தேசிய விமான நிறுவனம் ஈரான் வான் எல்லைகளுக்கு மேல் பறக்காது என அறிவித்துள்ளது.

அப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், குறைந்தது ஏப்ரல் 18 ஆம் தேதி வரை தெஹ்ரானுக்கான விமானங்களை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுவிஸ் தேசிய விமான நிறுவனம்

மாற்றுப்பாதைகளை சில குறிப்பிட்ட விமானங்கள் மேற்கொள்வதால் சில நாடுகளுக்கான பயணம் நீண்டதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஹாங்காங், பாங்காக், சிங்கப்பூர், புதுடெல்லி மற்றும் மும்பைக்கு செல்லும் விமானங்கள் 90 நிமிடங்கள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பெய்ரூட்டுக்கான சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து வரும் விமானம் இன்று மீண்டும் தொடங்கும்.

‘பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமை’ என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button