Swiss News In Tamil

சுவிட்சர்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிட்சர்லாந்து ஒரு பன்மொழி நாடு, ஆனால் பொது போக்குவரத்தின் போது ரயில் அல்லது பேரூந்துகளில் பெரும்பாலும் ஜெர்மன், பிரஞ்சு அல்லது இத்தாலிய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த மொழிகள் புரியவில்லை என்றால் என்ன செய்வது என்ற பிரச்சினை உள்ளது.

அதனால்தான் பொது போக்குவரத்து குறித்த கூடுதல் அறிவிப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் என தற்போது ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து

குறிப்பாக சில ட்ராம் மற்றும் பேருந்து நடத்துநர்கள் தங்கள் அறிவிப்புகளை ஆங்கிலத்திலும் வெளியிட விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் முன்னோடியாக முதலில் போஸ்ட் பேரூந்துகள் தங்கள் அறிவிப்புகளை ஆங்கிலத்திலும் அறிவிக்க தீர்மானித்துள்ளன.

‘சுற்றுலாப் போக்குவரத்து மிகவும் முக்கியமானது என்பதால், எதிர்காலத்தில் ஆங்கிலத்தில் மேலும் மேலும் தகவல்கள் வழங்கப்படுவது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button