Swiss News In Tamil

சென்ட்காலன் கன்டோனில் இருவேறு கொள்ளைச்சம்பவங்கள்.!

சென்ட்காலன் கன்டோனில் இருவேறு கொள்ளைச்சம்பவங்கள்.!  கன்டோன் சென்ட் காலனில் நேற்று சனிக்கிழமை இருவேறு கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் பற்றிய மேலும் தெரியவருகையில்,

நேற்று சனிக்கிழமை சென்ட்காலன் விட்நாவ் பகுதியில், இரவு 8:20 அளவில் இரண்டு அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் மளிகைக் கடைக்குள் நுழைந்தனர். அதில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

மிரட்டலுக்கு பயந்த ஊழியர்கள் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர் பணத்தினை வாங்கிக்கொண்டு குற்றவாளிகள் லிண்டன்ஸ்திராஸ்சவின் வழியாக ஒரு இ-ஸ்கூட்டரில் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்காலன்

முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்த இருவரில் ஒருவர் பெண் என்பது தெரியவந்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டியவர்கள் சுமார் 2000 ஆயிரம் பிராங்குகள் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்ட்காலன் கன்டோனல் காவல் துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சிகளைத் தேடி வருகின்றனர். அறியப்படாத குற்றவாளிகளைப்பற்றி தகவல் வழங்கக்கூடிய எவரும் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுமாத்திரமின்றி சென்ட்காலன் நகரத்தில் உள்ள ஒரு கிளப்பிலும் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர் ராசெஸ்ட்திராசவில் உள்ள இளைஞர் கிளப்பில் மூடியிருந்த கதவினை உடைந்து உள்நுழைந்து அங்கு அலுவலகக் கதவை வலுக்கட்டாயமாகத் திறந்து பெட்டகத்திலிருந்து பல நூறு பிராங்குகள் பணத்தைத் திருடிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சென்ட்காலன்

பல சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆதாரம்: St.Gallen Cantonal Police

Related Articles

Back to top button