Swiss News In Tamil

சூரிச்சில் ட்ரக் சாரதிக்கு நிகழ்ந்த அசாதாரண மரணம்..!!

சூரிச்சில் ட்ரக் சாரதிக்கு நிகழ்ந்த அசாதாரண மரணம்..!! மரணம் இப்படியெல்லாமா வரும் என கேட்கத் தோன்றுகிறது, சுவிஸ் மாகாணமொன்றில் ட்ரக் சாரதி ஒருவருக்கு ஏற்பட்ட நிலையைப் பார்க்கும்போது!

அசாதாரண மரணம்

சூரிச் மாகாணத்தில், நேற்று முன் தினம், 32 வயது ட்ரக் சாரதி ஒருவர் தனது ட்ரக்கை சாலையோரமாக நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்குச் சென்றிருக்கிறார்.

ஆனால், அவர் ட்ரக்கில் கை பிரேக்கை (handbrake) போட மறந்துவிட்டிருக்கிறார். திடீரென தனது ட்ரக் பின்னோக்கி நகர்வதைக் கண்ட அவர் ட்ரக்கின் பின்னாலேயே ஓட, ட்ரக் ஒரு விளக்குக் கம்பத்தின் மீது மோதியிருக்கிறது.

ட்ரக் மோதிய வேகத்தில் விளக்குக் கம்பத்திலிருந்த மின் விளக்கு அந்த சாரதியின் தலையில் வந்து விழ, சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார் அவர்.

பொலிசார் இந்த அசாதாரண மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Articles

Back to top button