Swiss News In Tamil

சென்ட் கேலன் நகரில் சோகம் : விபத்தில் பலியான 7 வயது சிறுவன்

சென்ட் கேலன் நகரில் சோகம் : விபத்தில் பலியான 7 வயது சிறுவன் – இன்று புதன்கிழமை பிற்பகல் பிப்ரவரி, 28, 2024 அன்று சென்ட்காலன் கன்டோனில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து வொல்ப்காங்ஸ்திராசவில் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளது. 56 வயதான டிரக் டிரைவர் ஒருவரே 7 வயது சிறுவன் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்ட் கேலன்

பலத்த காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் சிறிது நேரத்தில் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்துக்கான காரணம் இன்னும் சரியாக தெளிவுபடுத்தப்படவில்லை. விபத்து இடம்பெற்ற வீதி போக்குவரத்திற்காக சிறிது நேரம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: St.Gallen City Police
அட்டைப் படம்: குறியீட்டுப் படம் © St.Gallen City Police

 

Related Articles

Back to top button