Swiss News In Tamil

மியன்மாருக்கு 2.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மனிதாபிமான உதவி

மியன்மாருக்கு 2.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மனிதாபிமான உதவி

மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்திற்குப் பிந்தைய மீட்பு முயற்சிகளுக்காக, சுவிட்சர்லாந்து 2.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (சுமார் $2.8 மில்லியன்) மதிப்புள்ள மனிதாபிமான உதவியை வழங்கும் என வெளியுறவுத் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

மேலும், மீட்பு நடவடிக்கைகளில் உதவ, சுவிஸ் மனிதாபிமான உதவி Swiss Humanitarian Aid Unit குழுவை மியன்மாரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாருக்கு

அவசர தங்குமிடங்கள், குடிநீர், உணவு,  மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்படும். மியன்மாரில் நிலநடுக்கத்தால் இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 3,400 பேர் காயமடைந்துள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button