சூரிக் கன்டோனில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

சூரிக் கன்டோனில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
சுவிட்சர்லாந்தின் Weiach பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுங்கச் சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான மதிப்புள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“சுவிட்சர்லாந்து சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புக்கான மத்திய அலுவலகம் (BAZG) வெளியிட்ட தகவலின்படி, மே 3ஆம் திகதி மாலை மொபைல் சுங்க ரோந்து குழு ஸ்லோவாக்கியா பதிவு இலக்கத்துடன் சென்ற காரொன்றை சோதனைக்காக நிறுத்தியது. அந்த வாகனத்தில் ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த மூவர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
சோதனையின் போது இரண்டு முதுகுப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றில் பல Goldvreneli தங்க நாணயங்கள், நகைகள் மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்கள் இருந்தன. மற்றொரு பையில் பல்வேறு பர்ஃப்யூம் பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வாகன நிபுணர்கள் காரை மேலும் விரிவாக பரிசோதித்தபோது, கூடுதல் மதிப்புள்ள பொருட்கள், பர்ஃப்யூம்கள், கொள்ளை கருவிகள் மற்றும் முகமூடி ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர் வாகனமும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைக்காக சூரிக் கன்டோனல் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளின் போது, இந்த பொருட்கள் அதே நாளில் Winkel பகுதியில் இடம்பெற்ற வீட்டுக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவை என போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





