எல்லைத் தாண்டும் பணியாளர்களுக்கான வேலை இழப்பு காப்பீட்டு மாற்றம்

எல்லைத் தாண்டும் பணியாளர்களுக்கான வேலை இழப்பு காப்பீட்டு மாற்றம் – சுவிட்சர்லாந்துக்கு பெரும் செலவு அபாயம்
சுவிட்சர்லாந்தில் வேலை செய்து அண்டை நாடுகளில் வசிக்கும் பணியாளர்களுக்கான வேலை இழப்பு காப்பீட்டு விதிகளை மாற்றும் திட்டம், European Parliament இல் முக்கிய கட்டத்தை கடந்துள்ளது.
இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், சுவிட்சர்லாந்துக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான வேலை இழப்பு நிதி பொறுப்பில் பெரிய மாற்றம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய முறையில், வேலை இழக்கும் எல்லைத் தாண்டும் பணியாளர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டிலிருந்தே வேலை இழப்பு நலன்களை பெறுகின்றனர். ஆனால் புதிய முன்மொழிவின் படி, அவர்கள் வேலை செய்த நாட்டே அந்த நிதி உதவியை வழங்க வேண்டும்.

இதன் விளைவாக, சுவிட்சர்லாந்துக்கு கூடுதலாக சுமார் ஒரு பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை செலவாகக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 4 இலட்சம் பேர் Switzerland இல் வேலை செய்து, France, Germany, Italy மற்றும் Austria போன்ற அண்டை நாடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்த மாற்றம் குறிப்பாக Geneva, Basel-Stadt மற்றும் Ticino போன்ற எல்லைப்பகுதி கன்டோன்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.





