பிரான்ஸ் தலைநகரை விட்டு வேகமாக வெளியேறும் மக்கள்..!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் பரிசில் இருந்து 122,919 பேர் வெளியேறியுள்ளனர். பிரான்சின் பல்வேறு நகரங்களுக்கு அவர்கள் குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளனர். சென்ற ஆண்டு ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி பரிசில் 2,117,702 பேர் வசிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 2,240,642 ஆக இருந்தது. தலைநகர் பரிசில் நிலத்தின் விலை, வீட்டு வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் பரிசை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
INSEE நிறுவனம் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலையே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






