சுவிஸ் கோடை வெப்ப அலையால் மனநிலையும் உடலும் பாதிப்பு: தப்பிக்க உதவும் எளிய வழிகள்
சுவிஸ் கோடை வெப்ப அலையால் மனநிலையும் உடலும் பாதிப்பு: தப்பிக்க உதவும் எளிய வழிகள்

சுவிஸ் கோடை வெப்ப அலையால் மனநிலையும் உடலும் பாதிப்பு: தப்பிக்க உதவும் எளிய வழிகள்
“வெயில் கொஞ்சம் அதிகமா இருந்தாலே… ஏன் இவ்வளவு கோபம் வருது? சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எரிச்சல் வருது? இரவு முழுக்க தூக்கம் வராம, அடுத்த நாள் உடம்பே சோர்ந்து போயிருக்கு… இது நம்முடைய மனசு பிரச்சினையா? இல்ல இந்த வெயிலோட விளைவா?”
சுவிட்சர்லாந்தில் இப்போது கோடை வெப்பம் ஒரு சாதாரண பேச்சாக இல்லாமல், பலருடைய அன்றாட வாழ்க்கையையே பாதிக்க ஆரம்பிச்சிருக்கு.
குறிப்பாக நம்ம தமிழர்களுக்கு ஒரு விஷயம் ரொம்ப முக்கியம். “வெயில் தானே… கொஞ்சம் பொறுத்துக்கலாம்” என்று நாம பெரும்பாலும் நினைப்போம். ஆனால் தொடர்ந்து வரும் வெப்பமான நாட்களும், குறிப்பாக வெப்பம் குறையாத இரவுகளும் உடலுக்கு மட்டும் இல்லாமல் மனநிலைக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
நீங்க கவனிச்சிருக்கிறீங்களா?
ஒரு நாள் நல்லா தூங்காம போனால் மறுநாள் சின்ன விஷயத்துக்கே கோபம் வரும். யாராவது இரண்டு வார்த்தை அதிகமா பேசினாலே எரிச்சல் வரும். வேலை செய்ய மனசு வராது. கவனம் செலுத்த முடியாது. “இன்று ஏதோ mood சரியில்லை” என்று நினைப்போம்.

ஆனால் இதற்கு பின்னாலேயே உடல் ரீதியான ஒரு காரணம் இருக்கலாம்.
வெப்பம் அதிகமாக இருக்கும்போது நம்முடைய உடல், உட்புற வெப்பநிலையை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் வேலை செய்கிறது. இரத்த நாளங்கள் விரிவடைகின்றன, இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, உடலில் இருந்து வியர்வை மூலம் தொடர்ந்து தண்ணீர் வெளியேறுகிறது.
அதாவது, வெளியே நாம அமைதியாக உட்கார்ந்திருந்தாலும், உடலுக்குள் ஒரு “cooling system” தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறது.
அதனால்தான் அதிக வெப்பத்தில் முதலில் பாதிக்கப்படுவது நம்முடைய concentration, patience, energy.
அதற்கு மேலாக இரவில் தூக்கம் சரியாக வரவில்லை என்றால்… மறுநாள் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்விலும் இதே மாதிரியான விஷயம் தெரியவந்திருக்கிறது. 2023ஆம் ஆண்டு 50 வயதுக்கு மேற்பட்ட 1,800 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் பாதி பேர் வெப்பம் தங்களுடைய உடல்நலத்திற்கு சிரமமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்கள்.
குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நீண்டகால நோய்களுடன் இருப்பவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்கள்.
ஆனால் இங்கே ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.
2026ஆம் ஆண்டின் கோடை, ஏற்கனவே மிகவும் அதிகமான வெப்பத்தை பதிவு செய்திருக்கிறது. ஜூன் மாதம் வழக்கமான சராசரியை விட 3.5 டிகிரி அதிகமாக இருந்தது. ஜூலை மாதம் 3.2 டிகிரி அதிகமாக இருந்து, 1864ஆம் ஆண்டு முதல் பதிவான தரவுகளில் சுவிட்சர்லாந்தின் மிக வெப்பமான ஜூலை மாதமாக அமைந்தது.
அதனால் “இந்த வருடம் ஏன் இவ்வளவு வெப்பமா இருக்கு?” என்று நீங்க நினைப்பது வெறும் உணர்வு மட்டும் இல்லை. தரவுகளும் அதை காட்டுகின்றன.
இப்போது நம்ம வீட்டில் செய்யக்கூடிய சில சின்ன விஷயங்களைப் பார்ப்போம்.
முதலில் தூக்கம்.
பகலில் வீட்டுக்குள் வெப்பம் வராமல் ஜன்னல்கள் மற்றும் shutters-ஐ மூடி வைத்துக்கொள்ளலாம். இரவு அல்லது அதிகாலை நேரத்தில் ஜன்னல்களைத் திறந்து நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தலாம்.
கனமான போர்வைகளுக்கு பதிலாக பதிலாக light cotton bedsheet பயன்படுத்தலாம். தூங்குவதற்கு முன் குளிர்ந்த தண்ணீரில் கால்களை சிறிது நேரம் வைப்பதும் உதவியாக இருக்கலாம்.
மேலும், bedroom-ல் TV, computer போன்ற electronic devices அதிக நேரம் இயங்கிக்கொண்டிருந்தால் அவையும் சிறிதளவு வெப்பத்தை உருவாக்கும். முடிந்தால் அவற்றை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
அடுத்தது தண்ணீர்.
“எனக்கு தாகம் இல்லையே… தண்ணீர் குடிக்க வேண்டுமா?” என்று நினைக்கக்கூடாது.
வெப்பமான காலங்களில் உடலில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கும். எனவே நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம்.
மது மற்றும் அதிக சர்க்கரை கொண்ட soft drinks-ஐ குறைப்பதும் நல்லது.
சாப்பாட்டிலும் கொஞ்சம் மாற்றம் செய்யலாம்.
மதிய நேரத்தில் மிக கனமான உணவை சாப்பிட்டுவிட்டு உடனே வேலை செய்ய முயற்சித்தால், வெப்பமும் சேர்ந்து உடலை இன்னும் சோர்வடையச் செய்யலாம்.
காய்கறிகள், பழங்கள் மற்றும் இலகுவான உணவுகள் அந்த நேரத்தில் வசதியாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் கூட நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். அதிகாலை அல்லது மாலை நேரத்தில் exercise செய்வது, கடுமையான மதிய வெப்பத்தில் செய்வதைவிட உடலுக்கு சுலபமாக இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம்… நம்ம மனநிலை.
வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் நமக்கு பிடித்தவர்களிடமே தேவையில்லாமல் கோபப்படலாம். வீட்டில் கணவன்–மனைவி இடையே சின்ன சண்டை, குழந்தைகளிடம் பொறுமையில்லாமல் பேசுவது, வேலை செய்யும் இடத்தில் tension… இவை எல்லாமே அதிகரிக்கலாம்.
அந்த நேரத்தில் “நான் ஏன் இப்படியெல்லாம் கோபப்படுகிறேன்?” என்று நம்மையே குறை சொல்ல வேண்டாம்.
முதலில் ஒரு glass தண்ணீர் குடிங்க.
கொஞ்சம் குளிர்ச்சியான இடத்துக்கு போங்க.
10 நிமிடம் அமைதியாக உட்காருங்க.
சில நேரங்களில் நமக்கு தேவைப்படுவது பெரிய solution இல்லை… உடலுக்கு கொஞ்சம் cooling, மனதுக்கு கொஞ்சம் rest தான்.
வீட்டில் அதிக வெப்பமாக இருந்தால், அருகிலுள்ள library, shopping centre, museum, church அல்லது மரங்கள் நிறைந்த குளிர்ச்சியான இடம் போன்றவற்றில் சிறிது நேரம் இருக்கலாம்.
முக்கியமாக வயதான பெற்றோர்கள் அல்லது தனியாக வாழும் உறவினர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு phone call பண்ணிப் பாருங்க.
“சாப்பிட்டீங்களா? தண்ணீர் குடிச்சீங்களா? வீட்டில் ரொம்ப வெப்பமா இருக்கா?”
இந்த மூன்று கேள்விகளே சில நேரங்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் மறந்துவிடக்கூடாது.
வெயில் காரணமாக சோர்வு அல்லது எரிச்சல் வருவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் பல வாரங்களாக மனச்சோர்வு, தூக்கமின்மை, அதிகமான பதட்டம் அல்லது மனநிலை மாற்றம் தொடர்ந்து இருந்தால், அதை வெயிலுக்கு மட்டும் காரணம் என்று நினைக்கக்கூடாது.
அப்போது மருத்துவரை அல்லது மனநல நிபுணரை அணுகுவது நல்லது.
அதனால் அடுத்த முறை வெயிலில் யாராவது வீட்டில் கொஞ்சம் எரிச்சலாக பேசினால்…
“என்னடா இவங்க இப்படி கோபப்படுறாங்க?” என்று உடனே சொல்லாமல்…
“வெயில் அதிகமா இருக்கு… முதல்ல தண்ணீர் குடிச்சிட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்” என்று சொல்லிப் பாருங்க.
ஏனென்றால் இந்த கோடையில் உடலை மட்டும் குளிர்ச்சியாக வைத்திருப்பது போதாது… நம்ம மனதையும் கொஞ்சம் cool-ஆ வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.






