சுவிட்சர்லாந்தில் தபால் தலை கட்டணம் 2027 முதல் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் தபால் தலை கட்டணம் 2027 முதல் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் தபால் தலை கட்டணம் 2027 முதல் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் கடிதங்களை அனுப்புவதற்கான தபால் கட்டணம் 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் அதிகரிக்கவுள்ளதாக Swiss Post அறிவித்துள்ளது.
இதன்படி, வழக்கமான Priority அல்லது A-Mail கடிதங்களுக்கான தபால் தலை கட்டணம் 20 ராப்பன் அதிகரித்து 1.40 பிராங்காகும். Economy அல்லது B-Mail கடிதங்களுக்கான கட்டணம் 10 ராப்பன் அதிகரித்து 1.10 பிராங்காக நிர்ணயிக்கப்படவுள்ளது.
அதேவேளை, பார்சல் அனுப்புவதற்கான கட்டணங்களில் உடனடி மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தற்போதைய பார்சல் கட்டணங்கள் 2029ஆம் ஆண்டு இறுதி வரை மாற்றமின்றி தொடரும் என Swiss Post தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தபால் கட்டணத்தில் இதற்கு முன்னர் 2024ஆம் ஆண்டிலேயே கடைசியாக அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது மீண்டும் கடித அனுப்பும் கட்டணத்தை உயர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சுவிட்சர்லாந்துக்குள் வழக்கமாக கடிதங்களை அனுப்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2027 முதல் கூடுதல் செலவு ஏற்படும். குறிப்பாக A-Mail மற்றும் B-Mail சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் இந்த கட்டண உயர்வை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.





