Local Swiss News

திருடிய பொருட்களுடன் கஜாக்கில் தப்பிய 58 வயது நபர்! செயின்ட் கேலனில் பரபரப்பு!

திருடிய பொருட்களுடன் கஜாக்கில் தப்பிய 58 வயது நபர்! செயின்ட் கேலனில் பரபரப்பு!

திருடிய பொருட்களுடன் கஜாக்கில் தப்பிய 58 வயது நபர்! செயின்ட் கேலனில் பரபரப்பு!

சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலன் மாகாணத்தில் உள்ள வீசன் பகுதியில், சினிமா காட்சியைப் போல் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை, 58 வயதான ருமேனிய நாட்டவர் ஒருவர், வீசனில் உள்ள ஒரு தனி வீட்டிற்குள் புகுந்து உணவு, மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தை திருடியதாக செயின்ட் கேலன் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் வீட்டில் இருந்தவர்கள் திரும்பி வந்ததை அடுத்து, திருட்டில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தப்பிச் செல்லும் போது, அவர் அங்கிருந்த கஜாக் படகு ஒன்றையும் திருடி, அதில் ஏறி வாலன் ஏரியைக் கடந்து தப்ப முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4A 99

இதையடுத்து காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இறுதியாக, செயின்ட் கேலன் மாகாணத்தில் உள்ள குவின்டன் பகுதியில் அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தப்பிச் செல்லும் போது அவர் காயமடைந்திருந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

திருடப்பட்ட கயாக் படகு அதன் உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் கொள்ளை… பின்னர் கஜாக்கில் ஏரி கடந்து தப்பிய முயற்சி… இறுதியில் காவல்துறையிடம் சிக்கிய இந்த சம்பவம் தற்போது செயின்ட் கேலனில் பேசுபொருளாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button