Webland பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை..! போலி Email மூலம் பணம் பறிக்கும் கும்பல்
Webland பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை..! போலி Email மூலம் பணம் பறிக்கும் கும்பல்

Webland பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை..! போலி Email மூலம் பணம் பறிக்கும் கும்பல்…
சுவிட்சர்லாந்தில் Webland என்ற இணைய ஹோஸ்டிங் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி புதிய Phishing மோசடி அலை பரவி வருவதாக சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பயனர்களுக்கு அனுப்பப்படும் போலி மின்னஞ்சலில், உங்கள் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டண முறை செல்லுபடியாகவில்லை என்றும், உடனடியாக புதுப்பிக்காவிட்டால் உங்கள் டொமைன் மற்றும் மின்னஞ்சல் சேவைகள் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
அந்த மின்னஞ்சலில் உள்ள பொத்தானை அழுத்தினால், அது அதிகாரப்பூர்வ Webland இணையதளத்திற்கு செல்லாமல், மோசடிக்காரர்கள் உருவாக்கிய போலி இணையதளத்திற்கு அழைத்துச் செல்கிறது.
அங்கு முதலில் Webland கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கப்படுகிறது. அதன் பின்னர் கடன் அட்டை விவரங்கள், கைபேசி எண் மற்றும் SMS மூலம் வரும் உறுதிப்படுத்தல் குறியீட்டையும் பதிவு செய்யும்படி வலியுறுத்தப்படுகிறது.

இந்த தகவல்கள் அனைத்தும் மோசடிக்காரர்களின் கைக்கு சென்றால், அவர்கள் உங்கள் Webland கணக்கை கைப்பற்றுவதோடு மட்டுமல்லாமல், வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளக்கூடும்.
இதுபோன்ற மின்னஞ்சல் கிடைத்தால், அதில் உள்ள எந்த இணைப்பையும் திறக்காமல் உடனடியாக நீக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை feedback@cybercrimepolice.ch என்ற முகவரிக்கு அனுப்பி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும்.
ஏற்கனவே உங்கள் தகவல்களை வழங்கியிருந்தால், உடனடியாக உங்கள் வங்கி அல்லது அட்டை வழங்குநரை தொடர்புகொண்டு அட்டையை முடக்கச் செய்யுங்கள். Webland மற்றும் அதே கடவுச்சொல்லைப் பயன்படுத்தும் அனைத்து கணக்குகளின் கடவுச்சொற்களையும் உடனடியாக மாற்றுங்கள். பின்னர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும்.





