Swiss News In Tamil

சூரிச் விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்

சூரிச் விமான நிலையம் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய தலைமுறை 3D ஸ்கேனர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பயணிகள் இந்நிலையில் திரவங்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றை கையில் எடுத்துத் தனியாக காண்பிக்க வேண்டிய அவசியம் நீங்குகிறது.

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து புதிய இயந்திரங்கள் தரைதள பாதுகாப்புப் பகுதிகளில் செயல்படத் தொடங்கும். தொடர்ந்து மற்ற தளங்களும் இதே முறைக்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பட்ட ஸ்கேனர்கள் திட மற்றும் திரவ வெடிபொருட்களையும் கண்டறியக்கூடிய திறன் கொண்டவை. இதன் மூலம் பயணிகள் நேரத்தைச் சேமித்து, சோதனைகள் வேகமாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய மாற்றங்கள்:

திரவங்களையும் லாப்டாப்களையும் இனி தனியாக எடுக்க வேண்டியதில்லை. இயந்திரங்கள் 2Dக்கு பதிலாக 3D படங்களை ஆய்வு செய்கின்றன
சோதனை முடிந்தபின் கைகளில் ஏந்தக்கூடிய பைகளை வைத்துக்கொள்ளும் தட்டுகள் தானாகவே தொடக்க இடத்துக்குத் திரும்பும் அனைத்து தளங்களும் கோடைக்குள் புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு தற்சமயம், 100ml திரவ வரம்பு தொடரும்.

N1 1

ஆனால் வெயில்காலத்திற்குள் இந்த வரம்பு நீக்கப்பட்டு, அதிகபட்சம் 2 லிட்டர் வரை திரவங்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படும் விமான நிலையங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இதற்கான கட்டுப்பாடுகளை ஏற்கனவே தளர்த்தியுள்ளது.

மேலும், உடல் பரிசோதனை ஸ்கேனர்களும் புதுப்பிக்கப்படுகின்றன. இவை உலோகங்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான பொருட்களை கண்டறிந்து, கையால் செய்யப்படும் சோதனைகளை பெருமளவில் குறைக்கும். இருப்பினும், கைப்பைகள், ஜாக்கெட்டுகள் போன்றவற்றை அகற்றுவது தொடரும். புதிய பாதுகாப்பு உபகரணங்களின் மொத்த செலவு 34 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என சூரிச் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button