Swiss News In Tamil

சுவிஸ் விமான நிலையங்களில் சிகரட் கடத்தல் அதிகரிப்பு..!!

சுவிஸ் விமான நிலையங்களில் சிகரட் கடத்தல் அதிகரிப்பு..!!

சுவிட்சர்லாந்தின் விமான நிலையங்களில் 2024ல் சிகரட் உள்ளிட்ட புகையிலை உற்பத்தி கடத்தல் மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகள் 880,000 அறிவிக்காது கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன், இது 2023ல் மீட்கப்பட்ட 690,000 சிகரெட்டுகளை விட அதிகமாகும்.

ஜெனீவா விமான நிலையம் 2024ல் சிகரட் கடத்தலுக்கான முக்கிய மையமாக இருந்ததாக சுவிஸ் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு (FOCBS) தெரிவித்துள்ளது.

சுவிஸ்

ஜெனீவா விமான நிலையத்தில் மட்டும் 700,000க்கும் மேற்பட்ட அறிவிக்கப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சிகரெட்டுகள் பெரும்பாலும் பிரான்சில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் துருக்கி, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் காங்கோ குடியரசில் இருந்து கடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகையிலை கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என சுவிஸ் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button