Local Swiss News

இன்ஸ்டாகிராம் பதிவால் சிறை? பாலி மரபை அவமதித்த சுவிஸ் நபருக்கு சிறை கோரிக்கை!

இன்ஸ்டாகிராம் பதிவால் சிறை? பாலி மரபை அவமதித்த சுவிஸ் நபருக்கு சிறை கோரிக்கை!

இன்ஸ்டாகிராம் பதிவால் சிறை? பாலி மரபை அவமதித்த சுவிஸ் நபருக்கு சிறை கோரிக்கை!

இந்தோனேசியாவின் சுற்றுலா சொர்க்கம் என்று அழைக்கப்படும் பாலி தீவில், அங்குள்ள பாரம்பரிய மதச் சடங்குகளை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவிஸ் நாட்டவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம், பாலியின் மிகவும் புனிதமான ‘நியேபி’, Nyepiஅதாவது மௌன நாள் அனுசரிக்கப்பட்டபோது, அந்த சுவிஸ் சுற்றுலாப் பயணி தனது தங்கும் இடத்தை விட்டு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், “நியேபியும் உங்கள் விதிகளும் ஒழிக” என்று பதிவிட்டதுடன், “நியேபி ஒழிக” என்று கத்தும் காணொளியையும் வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செயல்கள், பாலியின் பாரம்பரியத்தையும் மத உணர்வுகளையும் அவமதிப்பதாகக் கருதப்பட்டதால், அரசு தரப்பு 15 மாத சிறைத்தண்டனை, விசாரணை முடியும் வரை தடுப்புக் காவல் மற்றும் அந்தப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனை பறிமுதல் செய்யவும் நீதிமன்றத்தில் கோரியுள்ளது.

16J 6

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் அனுசரிக்கப்படும் நியேபி தினத்தில், பாலி முழுவதும் 24 மணி நேரம் அமைதியாக இருக்க வேண்டும். வேலை, பயணம், பொழுதுபோக்கு, தேவையற்ற வெளிச்சம் உள்ளிட்ட பல செயல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பாலி, இந்தோனேசியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே தீவாக இருப்பதால், இந்த பாரம்பரியம் அங்கு மிகுந்த மரியாதையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம், வெளிநாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டு சட்டங்களையும், கலாச்சாரத்தையும், மத மரபுகளையும் மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button