Swiss News In Tamil

சுவிஸ் இராணுவ கவச வாகனம் விபத்து : 9 வீரர்கள் காயம்

சுவிஸ் இராணுவ கவச வாகனம் விபத்து : 9 வீரர்கள் காயம்

சுவிஸ் இராணுவ கவச வாகனம் விபத்து : 9 வீரர்கள் காயம் சென்ட்காலன் கன்டோன் (Walenstadt )வாலென் ஸ்டாட் இல் பயணித்த இராணுவ கவச வாகனம் கடுமையான விபத்தை சந்திந்துள்ளது. அதில் ஒன்பது ராணுவ வீரர்கள் லேசான காயம் அடைந்தனர்.

இன்று வியாழன் அன்று குறித்த விபத்து சம்பவம் நேர்ந்துள்ளது. ஆரம்பத்தில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் வெளியாகியிருக்கவில்லை. எனினும் தற்போது 9 பேர் லோசான காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிஸ் இராணுவ Militarunfall Verletzte nach einem Unfall auf dem Waffenplatz in Walenstadt ZuriToday 10 17 2024 07 59 PM 1

இராணுவ வீரர்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக நகரும் போதே குறித்த கவச வாகளம் பக்கவாட்டில் சாய்ந்து சுய விபத்துக்கு ஆளானது. மற்ற வாகனங்கள் எதுவும் விபத்தில் சிக்கவில்லை.

ராணுவ வீரர்கள் முதலுதவி மருத்துவ சிகிச்சை பெற்று சுற்றியுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(c) (sda/VBS)

Related Articles

Back to top button