Swiss News In Tamil
தானியங்கி இயந்திரத்தை அடித்து நொறுக்கிய சிறுவர்கள்
தானியங்கி இயந்திரத்தை அடித்து நொறுக்கிய சிறுவர்கள்
தானியங்கி முறையில் குளிர்பாணங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கக்ஈடிய செலக்டா இயந்திரம் இரு சிறுவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கன்டோன் Glarus- Filzbach பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மதியம் 12:30 மணியளவில்,, இடம்பெற்றுள்ளது.

இருவர் கண்ணாடியை உடைப்பதையும், இரும்பு கம்பி மற்றும் கல்லால் இயந்திரத்தினை தாக்குவதையும் அவ்வழியால் சென்ற ஒருவர் அவதானித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
மேலும் இருவரும் போலீசார் வரும் வரை தடுத்து வைக்கப்பட்டனர். குறிப்பிட்ட இருவரும் 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:- Kapo Glarus





