Swiss News In Tamil

சுவிஸ் பொது தேர்தல் 2023 – சூரிச் மாகாண இறுதி முடிவுகள்.!

சுவிஸ் பொது தேர்தல் 2023 சூரிச் மாகாண இறுதி முடிவுகள் சுவிட்சர்லாந்தில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் பெற்று முடிந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நாட்டை ஆட்சி செய்வதற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

சுவிஸ், சூரிச், மாகாணத்தில், மாநில கவுன்சில் தேர்தல், இறுதி முடிவு

இந்த தேர்தல் வலதுசாரி மக்கள் கட்சி வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் அதிளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறறெனினும் சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சி இம்முறை தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்பு முடிவுகள் உண்மையானால் இம்முறை பசுமைக் கட்சி அமைச்சரவையில் அங்கம் வகிக்க சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் கட்சிக்கு கூடுதல் அளவில் மக்கள் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் தற்போது சூரிச் மாகாணத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அது தொடர்பான தகவல்களை விளக்குகிறது கீழ் வரும் புகைப்படம்.

சூரிச் மாகாணத்தில், மாநில கவுன்சில் தேர்தல், இறுதி முடிவு, stimmen-ausgezaehlt, daniel-jositsch
https://www.zueritoday.ch/

குறிப்பிட்ட வாக்கெடுப்பு முடிவுகளின் படி இப்போது அதிகாரப்பூர்வமாக டேனியல் ஜோசிட்ச் 236,775 வாக்குகளுடன் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் முதல் சுற்று வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதோடு 2019 ஐ விட அதிக வாக்குகளை பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button