Swiss Tamilar News

உலக அரங்கில் வெண்கலப் பதக்கம் வென்ற விபூஜா மணிச்செல்வன்

உலக அரங்கில் வெண்கலப் பதக்கம் வென்ற விபூஜா மணிச்செல்வன்

உலக அரங்கில் வெண்கலப் பதக்கம் வென்ற விபூஜா மணிச்செல்வன்

சுவிட்சர்லாந்தின் சொலுத்தூர்ன் கண்டோனில் அமைந்துள்ள கிரென்சன் நகரைச் சேர்ந்த 25 வயதான விபூஜா மணிச்செல்வன், ஸ்பெயினின் சான் செபாஸ்டியான் நகரில் நடைபெற்ற Global Dance Open World Finals போட்டியில் பரதநாட்டிய நிகழ்ச்சியின் மூலம் வெண்கலப் பதக்கத்தை வென்று குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

இந்த உலக இறுதிப் போட்டிக்கான தகுதியை, சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற Global Dance Open Switzerland போட்டியின் Solo Folklore பிரிவில் முதல் இடத்தைப் பெற்று விபூஜா பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உலக இறுதிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறமையான கலைஞர்களுடன் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

விபூஜா, ஐந்து வயதிலிருந்தே தென்னிந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் பயின்று வருகிறார். அவர் பேர்னில் இயங்கும் திருக்கோணேஸ்வரர் நடனாலயம் மாணவியாக இருந்து, டாக்டர் சந்திரவதனி அவர்களிடம் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார்.

பரதநாட்டியத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே Teachers Grade தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள விபூஜா, தனது கலைப் பயணத்தை தொடர்ந்து செம்மைப்படுத்தும் நோக்கில் கர்நாடக இசை மற்றும் வீணை ஆகியவற்றிலும் பயிற்சி பெற்று வருகிறார். நடனம், இசை மற்றும் லயத்தின் ஒருங்கிணைந்த பயிற்சி, அவரது மேடை வெளிப்பாட்டையும் கலைநயத்தையும் மேலும் வளப்படுத்தி வருகிறது.

கலையுடன் கல்வியிலும் சிறந்து விளங்கிய விபூஜா, ETH Zürich பல்கலைக்கழகத்தில் Mechanical Engineering துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது தனது துறையில் பணியாற்றி வருவதோடு, தொழில் வாழ்க்கையையும் கலைப் பயிற்சியையும் சமநிலையுடன் முன்னெடுத்து வருகிறார்.

image00001 image00007
இதனுடன், தனது ஓய்வு நேரங்களில் நிகழ்வுகள் ஒருங்கிணைப்பதிலும் விபூஜா ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் Tamil Association of Students அமைப்பின் நிர்வாக சபையில் Event Manager ஆகப் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் இத்துறையில் தனது ஆர்வத்தை மேலும் வளர்த்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, தனது சகோதரியுடன் இணைந்து Iruvi Events என்ற நிகழ்வு முகாமைத்துவ முயற்சியை ஆரம்பித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள் பங்கேற்ற போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது, விபூஜாவின் நீண்டகால அர்ப்பணிப்பு, ஒழுக்கமான பயிற்சி மற்றும் கலை மீதான ஈடுபாட்டிற்குக் கிடைத்த ஒரு சர்வதேச அங்கீகாரமாகும்.

SwissTamilMedia சார்பில் உலக அரங்கில் சுவிட்சர்லாந்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள விபூஜா மணிச்செல்வனுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், அவரது எதிர்காலக் கலை மற்றும் தொழில் பயணத்திற்கு இனிய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button