மசூதிக்கு மிரட்டல்! ஷாஃப்ஹவுசனில் அதிரடி காவல்துறை நடவடிக்கை – பல மணி நேர பரபரப்பு
மசூதிக்கு மிரட்டல்! ஷாஃப்ஹவுசனில் அதிரடி காவல்துறை நடவடிக்கை – பல மணி நேர பரபரப்பு

மசூதிக்கு மிரட்டல்! ஷாஃப்ஹவுசனில் அதிரடி காவல்துறை நடவடிக்கை – பல மணி நேர பரபரப்பு…
சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசனில் அமைந்துள்ள அக்ஸா மசூதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை காவல்துறையினர் மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
காலை சுமார் 8 மணி 20 நிமிடியளவில், ஷால்டர்வெக் சாலையில் உள்ள மசூதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏராளமான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மசூதியைச் சுற்றியுள்ள முழுப் பகுதியையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து பல மணி நேரம் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. இருப்பினும், இதுவரை நம்பகமான அல்லது உடனடி ஆபத்து இருப்பதற்கான எந்த ஆதாரமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அந்தப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது.
எனினும், இந்த அச்சுறுத்தலுக்கு யார் பொறுப்பு என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காணும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், மசூதியின் உள்ளேயும் வெளியேயும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக தொடரும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
பொய்யான அச்சுறுத்தல்களை விடுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், காவல்துறை மற்றும் அவசர சேவை நடவடிக்கைகளுக்கான கணிசமான செலவுகளும் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.





