சுவிட்சர்லாந்தில் கோடை வெப்பம் தீவிரம்… .!!
சுவிட்சர்லாந்தில் கோடை வெப்பம் தீவிரம்… ஆனால் இன்னும் “அதிகாரப்பூர்வ வெப்பஅலை” இல்லை

சுவிட்சர்லாந்தில் கோடை வெப்பம் தீவிரம்… ஆனால் இன்னும் “அதிகாரப்பூர்வ வெப்பஅலை” இல்லை
நீண்ட விடுமுறை வார இறுதியில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரியைத் தாண்டியதுடன், கோடை கால வெப்பம் முன்கூட்டியே உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாசல் (Basel) பகுதியில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக பதிவான நிலையில், வலைஸ் கன்டோனின் சியோன் (Sion) நகரில் 32.4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. எனினும், இது இன்னும் “அதிகாரப்பூர்வ வெப்பஅலை” (Heatwave) என வகைப்படுத்தப்படவில்லை என்று MeteoSwiss தெரிவித்துள்ளது.
ஒரு பகுதி தொடர்ந்து மூன்று நாட்கள் சராசரி தினசரி 25 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலையை பதிவு செய்தால் மட்டுமே அதனை வெப்பஅலை என அறிவிக்க முடியும். ஆனால் இரவு நேரங்களில் நிலவிய குளிர்ச்சியான காலநிலை காரணமாக, கடந்த வார இறுதி இந்த அளவுகோலை எட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வாரம் பிரெஞ்சு மொழிப் பகுதிகளில் மேலும் பல நாட்களுக்கு 30 டிகிரிக்கு மேற்பட்ட வெப்பநிலை பதிவாகும் என வானிலை முன்னறிவிப்புகள் கூறுகின்றன.
மே மாத இறுதியில் இவ்வளவு அதிக வெப்பம் நிலவுவது அபூர்வமான ஒன்று என்றாலும், இது சாதனை அளவிலான வெப்பநிலை அல்ல என்றும் MeteoSwiss விளக்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் கோடைக்கால வெப்பநிலைகள் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்படுகிறது.
©WRS





