ஜெனீவாவின் இரவுநேர விளக்குகள் விலங்கியல் சூழலுக்கு அச்சுறுத்தல் – புதிய கட்டுப்பாடுகள் அமல்
ஜெனீவாவின் இரவுநேர விளக்குகள் விலங்கியல் சூழலுக்கு அச்சுறுத்தல் – புதிய கட்டுப்பாடுகள் அமல்

ஜெனீவாவின் இரவுநேர விளக்குகள் விலங்கியல் சூழலுக்கு அச்சுறுத்தல் – புதிய கட்டுப்பாடுகள் அமல்
Geneva நகரின் ஏரிக்கரையை அலங்கரிக்கும் பிரகாசமான இரவுநேர விளக்குகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தாலும், அவை விலங்குகள் மற்றும் இயற்கை சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரி, நதிகள் மற்றும் நகர வீதிகள் சுற்றியுள்ள அதிகப்படியான செயற்கை விளக்குகள், மீன்கள், வௌவால்கள், பூச்சிகள் மற்றும் தாவரங்களின் இயல்பான வாழ்க்கை முறைகளை பாதிக்கின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக உணவு தேடும் பழக்கங்கள் பாதிக்கப்படுவதோடு, விலங்குகளின் இயற்கை வாழ்விடங்களும் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெனீவா கன்டோன் அதிகாரிகள் தற்போது புதிய மற்றும் கடுமையான வெளிச்ச கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, தேவையற்ற விளக்குகள் இரவு நேரங்களில் கட்டாயமாக அணைக்கப்பட வேண்டும் என்றும், புதிய கட்டிடங்கள் மற்றும் திட்டங்கள் தொடங்கப்படும் முன் அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் தாக்கம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜெனீவா ஏரிக்கரையோர பகுதிகளில் இரவுநேர விளக்குகளின் பிரகாசத்தை குறைக்கும் சோதனை திட்டங்களும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விலங்குகள் பாதுகாப்பாக நகரும் வகையில் “இருண்ட பாதைகள்” (dark corridors) உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் கருத்துப்படி, நகர வளர்ச்சியும் உயிரியல் பாதுகாப்பும் இடையே சமநிலை பேணுவது எதிர்கால நகர திட்டமிடலில் மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது.
©WRS






