Swiss News In Tamil

சூரிச் மத்திய ரயில் நிலையத்தில் கார் உடைப்பு சந்தேக நபர்கள் கைது

சூரிச் மத்திய ரயில் நிலையத்தில் கார் உடைப்பு சந்தேக நபர்கள் கைது

சூரிச் (Zürich) மத்திய ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (07.02.2026) அதிகாலை இரண்டு பேர் கார் உடைப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சூரிச் கன்டோனல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூரில் (Chur) இருந்து சூரிச் நோக்கி பயணித்த ரயிலில், ரயில் பணியாளர்கள் வழக்கமான கட்டுப்பாட்டின் போது இரண்டு நபர்களிடம் பயணச்சீட்டை கேட்டபோது, அவர்களிடம் செல்லுபடியாகும் டிக்கெட் இல்லை என்பதும், அடையாள ஆவணங்களையும் வழங்க முடியாத நிலை இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, SBB போக்குவரத்து காவல்துறையினர் (Transportpolizei) அந்த இருவரையும் சூரிச் கன்டோனல் காவல் துறையின் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையின் போது, கார் உடைப்பிற்கு பயன்படுத்தப்படும் என சந்தேகிக்கப்படும் கருவிகள் மற்றும் திருட்டு பொருட்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. மேலும், அவர்கள் உடன் கொண்டு வந்திருந்த இரண்டு மின்சார சைக்கிள்களும் (E-Bikes) சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்டது.

N3 5

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், 29 வயதுடைய அல்ஜீரிய நாட்டு சேர்ந்த இந்த இருவர், அதற்கு முந்தைய இரவு சென்ட்கேலன் (St. Gallen) கன்டோனில் உள்ள பாட் ரகாஸ் (Bad Ragaz) பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்களை உடைத்து திருட்டு செய்ததுடன், பூட்டப்படாமல் இருந்த வாகனங்களிலிருந்தும் பொருட்களை திருடியதாக தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு மின்சார சைக்கிள்களையும் அங்கிருந்தே திருடியிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்சார சைக்கிள்கள் பின்னர் உரிய உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்கப்பட்டதாக சூரிச் கன்டோனல் காவல் துறை தெரிவித்துள்ளது. சூரிச் ரயில் நிலையம் கைது, கார் உடைப்பு திருட்டு, சுவிட்சர்லாந்து குற்றச்செயல் விசாரணை போன்ற விடயங்கள் தற்போது பாதுகாப்பு தொடர்பான கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளன.

© Kapo ZH

Related Articles

Back to top button