Swiss News In Tamil

சுவிட்சர்லாந்திலிருந்து மொரோக்கோவுக்கு நாடுகடத்தல் இனி விரைவாகும்

சுவிட்சர்லாந்திலிருந்து மொரோக்கோவுக்கு நாடுகடத்தல் இனி விரைவாகும்

சுவிட்சர்லாந்திலிருந்து மொரோக்கோவுக்கு நாடுகடத்தல் இனி விரைவாகும்

சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மொரோக்கோ நாட்டவர்களை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் இனிமேல் வேகமாக முன்னெடுக்கப்பட உள்ளன.

இதற்கான புதிய ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்தும் மொரோக்கோவும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளதாக Staatssekretariat für Migration (SEM) தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், அடையாளம் காணுதல் மற்றும் நாடுகடத்தல் தொடர்பான நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட உள்ளன.

தற்போது, தஞ்சம் கோரி விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண சராசரியாக 150 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் புதிய ஒப்பந்தத்தின் கீழ், அந்த காலம் 30 நாட்களாக குறைக்கப்படும் என SEM பேச்சாளர் Daniel Bach தெரிவித்துள்ளார்.

N3 4

அதேபோல், பயண ஆவணங்களும் இனி விரைவாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், மொரோக்கோ தலைநகர் Rabat நகரில் நடைபெற்ற சந்திப்பின் போது கையெழுத்திடப்பட்டது.

அந்த சந்திப்பில், சுவிட்சர்லாந்தின் குடியேற்றத்துறை செயலாளர் Vincenzo Mascioli மற்றும் மொரோக்கோவின் குடியேற்ற மற்றும் எல்லை கண்காணிப்பு பிரிவு தலைவர் Khalid Zerouali கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை, ஏப்ரல் மாத இறுதியில் Bern நகருக்கு வந்திருந்த மொரோக்கோ வெளிவிவகார அமைச்சர் Nasser Bourita மேற்கொண்ட விஜயத்திற்குப் பிறகு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, மொரோக்கோ வெளிவிவகார அமைச்சர் மற்றும் சுவிஸ் கூட்டாட்சி அமைச்சர் Beat Jans ஆகியோர் குடியேற்ற ஒத்துழைப்பை முக்கிய முன்னுரிமையாக கருதுவதாக தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, நாடுகடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்ற கட்டுப்பாடு தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அவசியம் என இரு தரப்பும் வலியுறுத்தியிருந்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button