Swiss News In Tamil

அரசியல்வாதிகளின் சம்பள அதிகரிப்பை நிராகரித்த சூரிச் மக்கள்

அரசியல்வாதிகளின் சம்பள அதிகரிப்பை நிராகரித்த சூரிச் மக்கள்.!! சுவிட்சர்லாந்தில் அரசியல்வாதிகளின் சம்பள அதிகரிப்பினை சூரிச் மக்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில் இவ்வாறு மக்கள் தங்களது தீர்மானத்தையும் வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 52 வீதமானவர்கள் சம்பள அதிகரிப்பு வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

அரசியல்வாதிகளின்

சூரிச்சை சேர்ந்த சுமார் 45,350 பேர் சம்பள அதிகரிப்பை எதிர்த்தும் 39,881 பேர் சம்பள அதிகரிப்பினை ஆதரித்தும் வாக்களித்துள்ளனர். தற்பொழுது சராசரியாக வழங்கப்படும் 16,000 சுவிஸ் பிராங்குகளை 22000 சுவிஸ் பிராங்குகளாக அதிகரித்துக் கொள்ளும் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு எனினும் இந்த ஆண்டு சம்பளத்தை அதிகரிக்கக் கூடாது என மக்கள் தெரிவித்துள்ளனர். இறுதியாக 1998 ஆம் ஆண்டில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதனால் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்துள்ளனர் எனினும் இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button