Swiss News In Tamil

சுவிஸ் ரியல் எஸ்டேட் தளம் அறிமுகப்படுத்திய புதிய நடமுறை

சுவிஸ் ரியல் எஸ்டேட் தளம் ஒன்று கட்டணம் செலுத்துபவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்னுரிமை அளிக்கின்றது.

சுவிஸ் நகரங்கள் பல குடியிருப்பு வசதி தொடர்பான நெருக்கடியில் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை விநியோகத்தை விட அதிகமாக உள்ளது.

கிடைக்கும் ஒவ்வொரு தங்குமிடத்திற்கும் நூற்றுக்கணக்கான குத்தகைதாரர்கள் விண்ணப்பிப்பதால்இ ஆன்லைன் ரியல் எஸ்டேட் தளமான ஹோம்கேட் என்ற தளம் டெனன்ட் பிளஸ் எனப்படும் பிரீமியம் சந்தா சேவையை வழங்குகிறது.

சுவிஸ் ரியல் எஸ்டேட் , அறிமுகப்படுத்திய புதிய நடமுறை

மாதாந்திரக் கட்டணமான 39.95 பிராங்குகளுக்கு, சந்தாதாரர்கள் அனைவருக்கும் முன்பாகவே நில உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு, முன்கூட்டியே அதை பார்க்கும் வசதியைப்பெறலாம்.

சூரிச் குத்தகைதாரர்கள் சங்கம் இந்த அணுகுமுறை தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அதன் வழக்கறிஞர் நிக்கோல் ஸ்வீசர், இந்த ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ முறை இரு வேறு சமுதாய வர்க்கத்தையும் சமமற்ற அணுகலையும் உருவாக்குகிறது என்று கூறினார்.

இருப்பினும், ஹோம்கேட்டைச் சேர்ந்த மார்க்கெட்பிளேஸ் குழுமம், கட்டணச் சந்தா அபார்ட்மெண்ட்டைத் தேடும் அனைவருக்கும் கூடுதல் விருப்பத்தை வழங்குகிறது. இது சரியான வாடகை சொத்தை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். குறிப்பாக சராசரி தேவைக்கு அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த நடமுறை உதவுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button