Swiss News In Tamil

சார்க்கோ இயந்திரம் மூலம் வாழ்வை மரணித்த பெண் தொடர்பில் திடுக் தகவல்

சார்க்கோ இயந்திரம் மூலம் வாழ்வை மரணித்த பெண் தொடர்பில் திடுக் தகவல்

சார்க்கோ இயந்திரம் மூலம் வாழ்வை மரணித்த பெண் தொடர்பில் திடுக் தகவல் சுவிட்சர்லாந்தில், எளிமையாக, தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என அழைக்கப்படும் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொடர்பில் திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

The Last Resort என்னும் நிறுவனம், நீண்ட கால மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர், தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்கு சார்க்கோ (Sarco) என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் Schaffhausen மாகாணத்தில், 64 வயது அமெரிக்கப் பெண்ணொருவர் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சார்க்கோ இயந்திரம் 27b3847acb9bc78cdc275d3c8ce6bfbb sarcoroom2cr data

பயங்கரமான நோயெதிர்ப்புக் குறைபாடு ஒன்றால் அவதியுற்று வந்த நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆனால், அந்த இயந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தின் துணை தலைவரான Florian Willet என்பவரையும், அவருடன் பலரையும் சுவிஸ் பொலிசார் கைது செய்தார்கள்.

அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் இன்னமும் விவாதங்கள் நடந்துவரும் நிலையில், அந்த இயந்திரம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், உயிரை மாய்த்துக்கொண்ட அந்த அமெரிக்கப்பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

அந்தப் பெண்ணின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்த தடயவியல் சிகிச்சை நிபுணர், அந்தப் பெண்ணின் கழுத்தில் காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் உயிரை மாய்த்துக்கொள்ளும்போது அவருடன் இருந்தவர் அந்த இயந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தின் துணை தலைவரான Florian Willet மட்டுமே.

அவர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அமெரிக்கப்பெண் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என தடயவியல் சிகிச்சை நிபுணர் கூறியுள்ளதைத் தொடர்ந்து வழக்கு சூடு பிடித்துள்ளது.

Related Articles

Back to top button